உக்ரைன் சுதந்திர தினத்தில் ரெயில் நிலையத்தின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 22 பேர் பலி!


உக்ரைன் சுதந்திர தினத்தில் ரெயில் நிலையத்தின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 22 பேர் பலி!
x

உக்ரைனின் சாப்லினோ நிலையத்தின் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

கீவ்,

உக்ரைன் மீதான ரஷிய போர் நேற்றுடன் 6 மாதங்களை கடந்தது. போரின் 6-வது மாதத்தை நிறைவு செய்த நேற்றைய தினம், உக்ரைன் தனது 33-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. சோவியத் யூனியனிலிருந்து 1991ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்றதை நேற்று கொண்டாடியது.

இதையொட்டி ரஷியா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்றும், எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே எச்சரித்த இருந்தார்.

இந்த நிலையில், நேற்று, உக்ரைனின் மத்திய டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ நிலையத்தின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சுதந்திர தினத்தையொட்டி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி வாயிலாக ஆற்றிய உரையின் போது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இதனை அறிவித்தார். அதிபர் ஜெலன்ஸ்கி பேசியதாவது:-

டொனெட்ஸ்கில் இருந்து மேற்கே 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாப்ளின் ரெயில் நிலையத்தை ரஷிய ராக்கெட்டுகள் தாக்கின. அதில் ஐந்து பயணிகள் ரெயில் பெட்டிகள் தீக்கிரையாகின.

அங்கு மீட்புப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும், சினெல்னிகோவ் மாவட்டத்தில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் பிற்பகல் 3 மணியளவில், ரஷிய ராக்கெட் ஒரு வீட்டில் மோதியது.அந்த ராக்கெட் தாக்குதலில் 11 வயது குழந்தை உட்பட சிலர் உயிரிழந்தனர்.

உக்ரைன் இறுதி வரை போராடும் என்று அவர் தெரிவித்தார்.


Next Story