உக்ரைன்: குபியன்ஸ்க் நகரில் ஏவுகணை தாக்குதல்கள்... குப்பை கூளங்களால் நிரம்பிய வீதிகள்


உக்ரைன்: குபியன்ஸ்க் நகரில் ஏவுகணை தாக்குதல்கள்... குப்பை கூளங்களால் நிரம்பிய வீதிகள்
x

கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட குபின்ஸ்க் நகரில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷியா, இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது.

பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது. ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டித்தன. இந்த நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், உக்ரைனின் 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது இன்று ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட குபின்ஸ்க் நகரில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த நகரில் வீசப்பட்ட ஏவுகணை தாக்குதல்களால், அந்நகரின் கடைகள், வீதிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு குப்பை கூளங்களால் வீதியெங்கும் நிரம்பி கானப்படுகிறது.

1 More update

Next Story