உடற்பயிற்சி மூலம் பிரபலமான ராணுவ வீராங்கனை தற்கொலை - மகள் பிறந்தநாளை கொண்டாடிய சிலநாட்களில் விபரீத முடிவு

உடற்பயிற்சி மூலம் ராணுவ வீராங்கனை சமூகவலைதளத்தில் பிரபலமடைந்தார்.
உடற்பயிற்சி மூலம் பிரபலமான ராணுவ வீராங்கனை தற்கொலை - மகள் பிறந்தநாளை கொண்டாடிய சிலநாட்களில் விபரீத முடிவு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த வீராங்கனை மிச்சேல் யங்க் (வயது 34). இவர், தான் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு பிரபலமடைந்தார். மிச்சேலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவருக்கு கிரேசி (வயது 12) என்ற மகள் உள்ளார். கிரேசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தனது மகள் கிரேசி பிறந்தநாள் தொடர்பாக மிச்சேல் யங்க் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மகள் பிறந்தநாளை கொண்டாடிய சில நாட்களில் மிச்சேல் யங்க் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மிச்சேல் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மிச்சேல் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com