புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி


புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி
x

கோப்புப்படம்

லாயிட் ஆஸ்டின் கடந்த வாரம் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் சிக்கல்களுக்காக தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்

வாஷிங்டன், டிசி,

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியாட் ஆஸ்டின் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக நேற்று வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மெடிக்கல் சென்டர் வெளியிட்ட அறிக்கையில், "லாயிட் ஆஸ்டின் உடல்ரீதியாக சில சிக்கல்களை சந்தித்துள்ளார். புத்தாண்டு தினத்தில் இருந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

லாயிட் ஆஸ்டினுக்கு டிசம்பர் மாத தொடக்கத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டது. டிசம்பர் 22-ம் தேதி அன்று புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க புரோஸ்டேடெக்டோமி என்று அழைக்கப்படும் "அறுவை சிகிச்சை முறைக்கு" அவர் உட்படுத்தப்பட்டார்.

இந்த செயல்முறையின் போது அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆஸ்டின் தனது அறுவை சிகிச்சையில் இருந்து சீராக குணமடைந்து மறுநாள் காலை வீடு திரும்பினார். அவரது புரோஸ்டேட் புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியப்பட்டது, மேலும் அவரது உடல்நிலை தற்போது சிறப்பாக உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறையின் போது ஆஸ்டின் மயக்க மருந்தின் கீழ் இருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை, பென்டகன் இதை முன்னர் வெளிப்படுத்தவில்லை மற்றும் வெள்ளை மாளிகையை எச்சரிக்கவில்லை என்று செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story