அயர்லாந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - கொட்டும் மழையில் வரவேற்பு அளித்த மக்கள்

கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி நின்று ஜோ பைடனுக்கு அயர்லாந்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.
அயர்லாந்து சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - கொட்டும் மழையில் வரவேற்பு அளித்த மக்கள்
Published on

டப்ளின்,

அமெரிக்க அதிபர் பைடன் அரசு முறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் மூலம் அயர்லாந்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அயர்லாந்து வெளியுறவு மந்திரி மைக்கேல் மார்ட்டினுடன் அங்குள்ள கார்லிங்போர்ட் கோட்டைக்கு ஜோ பைடன் சென்றார். அப்போது அங்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி நின்று ஜோ பைடனுக்கு அயர்லாந்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com