உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6,194 கோடி ராணுவ உதவி


உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6,194 கோடி ராணுவ உதவி
x

உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உபகரணங்களை வழங்குவது இது 19-வது முறை ஆகும்.

வாஷிங்டன்,

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. இந்த போரில் நேட்டோ நாடுகள் நேரடியாக பங்கேற்காத போதும் உக்ரைனுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு மேலும் 775 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 ஆயிரத்து 194 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ.6,194 கோடி ராணுவ உதவிஆளில்லா கண்காணிப்பு விமானங்கள், கண்ணிவெடி எதிர்ப்பு வாகனங்கள், அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்டவை முதல் முறையாக உக்ரைனுக்கு வழங்கப்பட இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உபகரணங்களை வழங்குவது இது 19-வது முறை என்பதும், ஜோ பைடன் பதவி ஏற்றது முதல் இதுவரை உக்ரைனுக்கு மொத்தமாக ரூ.84,721 கோடி மதிப்பிலான ராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story