அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை கைது

அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை கைது
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் பகுதியில் உள்ள செயிண்ட் மேரி மேக்டலின் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அலேனிஸ் பினியன்(வயது 24). இவர் தன்னிடம் பயிலும் மாணவர்களுடன் சமூக வலைதளங்களில் சாட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், ஆசிரியை அலேனிஸ் பினியன், ஒரு மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவனின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி அலேனிஸ் பினியனை கைது செய்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ஆசிரியை அலேனிஸ் பினியன் ஒப்பந்த அடிப்படையில் தங்கள் பள்ளியில் பணியாற்றி வந்ததாகவும், தற்போது அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பையே முதன்மையாக கருதுவதாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com