ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு; ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல்


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு; ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தகவல்
x

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

மாஸ்கோ,

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக ஷின்சோ அபே இம்மாதம் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு தொடர்பாக, ஜப்பான் தூதரக உறவு கொண்டுள்ள ரஷியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் இதனை தெரிவித்திருப்பதாக ஜப்பான் கேபினட் துணை தலைமைச்செயலாளர் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொள்ள மாட்டார் என ரஷியா தெரிவித்துள்ளது. ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இறுதிச் சடங்கில் பங்கேற்பது குறித்து ரஷியா இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறினார்.


Next Story