உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விருப்பம் - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை


உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விருப்பம் - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 16 Sept 2022 1:27 PM IST (Updated: 16 Sept 2022 2:02 PM IST)
t-max-icont-min-icon

உஸ்பெஸ்கிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

சமர்கண்ட்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து வியாழக்கிழமை உஸ்பெஸ்கிஸ்தான் சென்றடைந்தார்.அவருக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டு மாநாட்டிற்கு கூட்டி செல்லப்பட்டார்.

அதே போல, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜிஜிங்பிங், மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரும் நேரில் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், உஸ்பெகிஸ்தான் சமர்கண்ட் நகரில் ஷங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகம் கோவிட்-19 தொற்றை முறியடித்து வருகிறது. கொரோனா, உக்ரைன் - ரஷியா போரால் உலகளாவிய வினியோக சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது. பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விரும்புகிறது. ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இன்று நம் நாட்டில் 70,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100 யூனிகார்ன்கள் உள்ளன என்றார்.

2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, முதல் முறையாக சீன அதிபரை நேரில் சந்தித்து பேச உள்ளார் பிரதமர் மோடி. அதே போல, உக்ரைன் - ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு ரஷிய அதிபரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2020 கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நிகழ்வுக்கு பின்பு, முதல் முறையாக சீன அதிபருடன் ஒரே மேடையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

1 More update

Next Story