மக்களின் நன்மைக்காக ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் - மகிந்த ராஜபக்சே


மக்களின் நன்மைக்காக ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் - மகிந்த ராஜபக்சே
x

மக்களின் நன்மைக்காக ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறினார்.

கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த மே மாதம் பிரதமர் பதவி விலகிய பிறகு மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது மகிந்த ராஜபக்சே பேசியதாவது:-

அதிபர் ரணிலுடன் இணைந்து செயலப்ட வேண்டும். முன்பு நாங்கள் ரணில் தவறானவர் என கூறினோம். ஆனால் இன்று அவர் எங்களுடன் உள்ளார். நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் ரணிலுக்கு ஆதரவு வழங்கி செயல்பட வேண்டும்.

மக்களின் நன்மைக்காக அவருடன் நாங்கள் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். இன்று நாம் பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ளோம். அந்த சவால்களை வெற்றி கொள்வதற்கான சக்தி எங்களுக்கு உள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தேவைகளை அறிந்து கொண்டு அதற்காக செயல்பட வேண்டும். மக்கள் இன்று நல்ல அரசியல் விழிப்புணர்வுடன் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story