காதலியின் முத்தத்தால் சிறையில் இருந்த காதலன் மரணம்...! அதிகாரிகள் அதிர்ச்சி...!


காதலியின் முத்தத்தால் சிறையில் இருந்த காதலன் மரணம்...! அதிகாரிகள் அதிர்ச்சி...!
x
தினத்தந்தி 19 Aug 2022 10:04 AM GMT (Updated: 2022-08-19T15:51:25+05:30)

காதலி காதலனை பார்க்க சென்று உள்ளார். அப்போது அவர் காதலனுக்கு நீண்ட நேரம் முத்தம் கொடுத்து உள்ளார். இதில் ஜோசுவா பிரவுன் சுருண்டு விழுந்து பலியானார்.

வாஷிங்டன்:

சில நேரங்களில் நம்ப முடியாத விஷயங்கள் நடக்கும். நடந்த சம்பவத்தை கேட்டால் அதிர்ந்து போவோம். சிறையில் இருந்த காதலனை சந்திக்க சிறைக்கு சென்ற பெண் தற்போது சிறைக்கு சென்று உள்ளார். சிறையில் இருக்கும் காதலனை பார்க்க சென்ற பெண், அவர் கொடுத்த ஒரே முத்தத்தால் காதலன் ஜெயிலில் மரணம் அடைந்தார்.இது அமெரிக்காவின் டென்னசியில் நடந்துள்ளது.

ஜோசுவா பிரவுன் இவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு 2029 வரை ௧௧ ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. போதை பொருள் பழக்கத்தால் அவர் சிறையில் போதைபொருள் கிடைக்காமல் திண்டாடினார். இதனை தன்னை பார்க்கவந்த காதலி ரேச்சல் டொலார்ட்டிடம் கூறி உள்ளார்.

இந்த நிலையில் மறுமுறை காதல் ரேச்சல் டொலார்ட் காதலனை பார்க்க சென்று உள்ளார். அப்போது அவர் காதலனுக்கு நீண்ட நேரம் முத்தம் கொடுத்து உள்ளார். இதில் ஜோசுவா பிரவுன் சுருண்டு விழுந்து பலியானார்.

போதைப்பொருள் கிடைக்காமல் சிறையில் தவித்த காதலைனை பார்க்க சென்ற காதலி வாயில் போதைப்பொருள் வைத்திருந்தார். முத்தமிடுவது போன்ற சாக்குப்போக்கில் அவர் வாயில் இருந்து போதை மருந்துகளை காதலன் வாயில் போட திட்டம் தீட்டி இருந்தார்.

ஆனால் போதைப்பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் காதலன் 14 கிராம் போதைப்பொருளை மொத்தமாக விழுங்கியுள்ளார். அதுவே விஷமாகிவிட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது இந்த விஷயம் தெரியவந்தது. அவரது வயிற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து போலீசார் காதலியை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.


Next Story