சீனாவில் 26 மாடி கட்டடத்தில் உலகின் மிகப்பெரிய பன்றிப்பண்ணை - நோய் பரவும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை

26 மாடிகளைக் கொண்ட பன்றிப்பண்ணையில் ஒரே சமயத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.
சீனாவில் 26 மாடி கட்டடத்தில் உலகின் மிகப்பெரிய பன்றிப்பண்ணை - நோய் பரவும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை
Published on

பெய்ஜிங்,

மத்திய சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் எசோவ் நகரில் 26 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு, அதில் உலகின் மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே சமயத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.

இந்த கட்டடத்தில் தானியங்கி முறையில் 30 ஆயிரம் உணவு அளிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிகளின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கும் வகையில் கட்டடத்தின் வெப்ப அளவை சீராக வைத்திருக்கவும், காற்றை சுத்திகரிக்கவும் மிக நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு 10 லட்சம் பன்றிகளை மின்சார கருவிகள் மூலம் கொன்று பன்றிக்கறி எடுக்கும் வசதிகளும் இங்கு உள்ளன. மேலும் பன்றிகளின் கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய அடுக்குமாடி கட்டடங்களில் உருவாக்கப்படும் மெகா பண்ணைகளில் நோய்கள் பரவ வாய்ப்புகள் என்று துரைசார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com