பிறவிப் பெருங்கடலை கடக்க வழிகாட்டும் "ஹரே கிருஷ்ண மஹா மந்திரம்"


பிறவிப் பெருங்கடலை கடக்க வழிகாட்டும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரம்
x

ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு இந்த மஹா மந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்த வழிமுறை இல்லை.

"ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே"

இந்த மஹா மந்திர உச்சரிப்பில் இருந்து உண்டாகும் தெய்வீக அதிர்வானது நமது கிருஷ்ண உணர்வை புத்துயிர் பெறச் செய்யும். ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஜீவன்களாவோம்.

பவுதிகத்துடன் நமது தொடர்பின் காரணமாக நினைவிற் கெட்டாத காலத்திலிருந்தும் நமது உணர்வானது மாசடைந்துள்ளது. நமது கிருஷ்ண உணர்வை உயிர்ப்பிப்பதன் மூலம் பவுதிக இயற்கைக்கு எதிரான மாயையை உடனேயே நிறுத்த முடியும்.

கிருஷ்ண உணர்வு என்பது செயற்கையாக மனதில் திணிக்கப்படும் ஒன்றல்ல, இந்த உணர்வே உயிர்வாழியின் உண்மையான சக்தியாகும். இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது. மிக சுலபமான இந்த யோக முறை இந்த யுகத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.

ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும். ஹரா என்பது பகவானின் அதி உன்னத சக்தியை குறிக்கிறது. இது பேச்சு வழக்கில் ஹரே என்று மாறி உள்ளது. இந்த மந்திரமானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது. ஹரே, கிருஷ்ண, ராம என்ற மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாகும்.

மந்திர உச்சாடனமானது கட்டுண்ட ஆத்மாக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக கடவுளிடமும் அவரது உள்ளுர சக்தியான ஹரா (ராதாராணி) விடமும் விடுவிக்கும் ஒரு ஆன்மீக அழைப்பாகும். தாயை நினைத்து கதறும் ஒரு குழந்தையின் அழுகைக்கு சமமானது. இந்த மந்திர உச்சாடனம், ஹரா என்ற தாய் ஹரி அல்லது கிருஷ்ணர் என்று அழைக்கப்படும் உன்னதமான தந்தையின் அருளைப் பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறது. ஆகவே ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு இந்த மஹா மந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்த வழிமுறை இல்லை.

எனவே, பிறவிப் பெருங்கடலைக் கடக்க இப்புனித நாமங்களை தினமும் சொல்லுங்கள். உங்கள் மனம் பக்குவப்படுவதை உணர்வீர்கள்.


Next Story