பெருந்துறையில் நள்ளிரவு பலத்த மழை: பெருமாள் கோவில் கோபுரத்தை மின்னல் தாக்கியது; பொம்மைகள் உடைந்து விழுந்தன

பெருந்துறையில் நள்ளிரவு பெய்த பலத்த மழையில் பெருமாள் கோவில் கோபுரத்தை மின்னல் தாக்கியது. பொம்மைகள் உடைந்து விழுந்தன
ஈரோடு
பெருந்துறை
பெருந்துறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென பெருந்துறை பஸ்நிலையம் அருகே உள்ள வெங்கட்ரமணசாமி கோவில் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது.இதனால் கோபுர கலசத்தின் கீழே 3 இடங்களில் இருந்த பரிவார சாமி பொம்மைகள் உடைந்து விழுந்தன.மற்றபடி கோபுரத்தில் விரிசலோ, வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை. பொம்மைகள் உடைந்து விழுந்தது நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் அங்கு இல்லை. அதனால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.இதையடுத்து நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மின்னல் தாக்கிய வெங்கட்ரமணசாமி கோவிலுக்கு சென்று பார்வையிட்டார்கள். கோபுரத்தையும் ஆய்வு செய்தார்கள். மேலும் உடைந்த பொம்மைகள் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு சீரமைத்து தரப்படும் என்று கூறினார்கள்.
Related Tags :
Next Story






