ஆனி மாத பூஜை: சபரிமலையில் நாளை மறுநாள் நடை திறப்பு

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் 15-ந்தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
Sabarimala Temple Reopen
Published on

திருவனந்தபுரம்:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சில நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.

நடைதிறப்பையெட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் 15-ந்தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கேவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிசேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.19-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com