ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் திருவிழா

கும்பகோணம் ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் திருவிழா
Published on

கும்பகோணம்;

கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பகுதியில் ஆதி நந்தவனத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கரக உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரக உற்சவத்தை முன்னிட்டு ஆதி நந்தவனத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று நள்ளிரவு கும்பகோணம் பேட்டை வடக்கு தெரு பகுதியில் உள்ள காவிரி கரையின் ராஜராஜன் படித்துறை பகுதியில் இருந்து சக்திவேல் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. தொடர்ந்து சக்திவேல் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேற்று அதிகாலை கோவிலை அடைந்தது. பின்னர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com