பிரம்மோற்சவம்.. மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பத்மாவதி தாயார்

விழாவின் நான்காம் நாளான இன்று காலையில் கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார்.
கல்ப விருட்ச வாகன சேவை
கல்ப விருட்ச வாகன சேவை
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

முதல் நாளில் த்வஜாரோஹணம், சின்ன சேஷ வாகன சேவை, இரண்டாம் நாளில் பெரிய சேஷ வாகன சேவை, ஹம்ச வாகன சேவை நடைபெற்றது.

 மூன்றாம் நாள் காலையில் முத்தையாபு பாண்டிரி வாகனத்தில் கஜேந்திர வரதராக தாயார் எழுந்தருளினார்.

இரவில் பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் யோக லட்சுமியாக எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நான்காம் நாளான இன்று காலையில் கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். இரவில் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

வரும் 18ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகளாக, நாளை கஜவாகன சேவையும், 18-ந்தேதி பஞ்சமி தீர்த்தமும் நடைபெறுகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com