கிருஷ்ணருக்கான ஆலயம்


கிருஷ்ணருக்கான ஆலயம்
x

விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான ஆலயம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்.

108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. பார்த்தன் என்ற பெயருடைய அர்ச்சுனனுக்கு, சாரதியாக இருந்து தேர் ஓட்டியதால், கிருஷ்ணருக்கு 'பார்த்தசாரதி' என்ற பெயர் வந்தது. அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்து, கீதையை உபதேசம் செய்து, மகாபாரதப் போரை வெல்ல உதவியாக இருந்த கிருஷ்ணனுக்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. முதலாம் நரசிம்மவர்ம பல்லவ மன்னரால் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. சோழர்கள் இந்த ஆலயத்தை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். கிருஷ்ணர், நரசிம்மர், ராமர், வராகர் போன்ற மகாவிஷ்ணுவின் திருமேனிகளை இங்கே தரிக்க முடியும். ராமர் மற்றும் நரசிம்மர் சன்னிதிகளை அடைய தனித்தனி வாசல்கள் இருக்கின்றன. பல நுணுக்கமான அலங்காரக் குடைவு வேலைப்பாடுகளை, இக்கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் தூண்களில் காணலாம்.

1 More update

Next Story