இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்


இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்
x

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள்.

18.10.2023 சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 1-ந் தேதி புதன்கிழமை. சதுர்த்தி திதி, இரவு(12.06)க்கு மேல் பஞ்சமி திதி. அனுஷம் நட்சத்திரம், இரவு(8.47)க்கு மேல் கேட்டை நட்சத்திரம். சித்தயோகம். சமநோக்குநாள். சதுர்த்தி விரதம். வெற்றிகள் குவிய விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய நாள்.

தினப்பலன்

மேஷம்: எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். பயணங்கள் அலைச்சல் தருமே தவிர, ஆனந்தம் ஆதாயம் தராது. நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

ரிஷபம்: கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து வரும் செய்தியால் வியப்படைவீர்கள்.

மிதுனம்: நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். கடன் சுமை குறைய புதிய முடிவெடுப்பீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

கடகம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். கல்யாண கனவுகள் நனவாகும். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்: நட்பால் நன்மை கிட்டும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகன பழுது செலவுகளை முன்னிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி: மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். சொத்துகள் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பனிப்போர் நீங்கும்.

துலாம்: சுபச்செய்திகள் வந்துசேரும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால்ஏற்பட்ட பகை மாறும்.

விருச்சிகம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

தனுசு: புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் உருவாகும். இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மகரம்: ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.

கும்பம்: வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்: வரன்கள் வாயில் தேடி வரும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

பொதுப்பலன்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். கும்ப ராசிக்காரர்களுக்கு இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள்.

சந்திராஷ்டமம்: மேஷம்.


Next Story