வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
Published on

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

முன்னதாக, கான்பூரில் இன்று காலை பெய்த லேசான மழை மற்றும் மைதானத்தில் ஈரமான அவுட் பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com