இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் விலகல்


இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்  விலகல்
x

முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது

விசாகப்பட்டினம் ,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியின்போது பீல்டிங் செய்தபோது அவருக்கு கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் 2-வது இன்னிங்சில் 10 ஓவர்கள் வீசினார்.காயம் குணமடைந்து 2-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், 2-வது போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

32 வயதான அனுபவ வீரரான ஜேக் லீச் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது


Next Story