பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை தோளில் தூக்கிச் சுற்றிய மல்யுத்த வீராங்கனை.. வீடியோ வைரல்

இந்திய கிரிக்கெட் வீரரை மல்யுத்த வீராங்கனை தோளில் தூக்கிச் சுற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை தோளில் தூக்கிச் சுற்றிய மல்யுத்த வீராங்கனை.. வீடியோ வைரல்
Published on

புதுடெல்லி,

பிரபல நடன நிகழ்ச்சியான 'ஜலக் திக்லா ஜா'-வின் பார்ட்டியில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுஸ்வேந்திர சாஹல் கலந்துகொண்டார். இந்த நடன நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும், மல்யுத்த வீராங்கனையுமான சங்கீதா போகத்தும் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சாஹலை தூக்கிய சங்கீதா தன்னை விடுமாறு கூறியும் அவரை பலமுறை தோளில் வைத்து சுற்றி பின்னர் இறக்கிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

View this post on Instagram

இந்த நடன நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களில் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com