100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே நோக்கம் - அஜிங்கிய ரஹானே


100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே நோக்கம் - அஜிங்கிய ரஹானே
x

கோப்புப்படம்

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், துணை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கிய ரஹானே. இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெறவில்லை. சீனியர் வீரரான அவர் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், துணை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

கடந்த 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணி 36-க்கு ஆல் அவுட்டான பின் இந்தியாவை அபாரமாக வழி நடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

மேலும், கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதன் பின்னர் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மோசமாக செயல்பட்டதால் அதன் பின்னர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், 100 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது பெரிய நோக்கம் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,

மும்பைக்காக சிறப்பாக ஆட வேண்டும். ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும். இவை எல்லாவற்றையும் விட பெரிய நோக்கம் 100 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story