இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை பயிற்சியாளர்கள் நியமனம்


இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை பயிற்சியாளர்கள் நியமனம்
x

இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயணம் வரும் இலங்கை தொடரில் இருந்து ஆரம்பமாக உள்ளது.

முன்னதாக தலைமை பயிற்சியாளராக இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த சமயத்தில், அவருடன் இணைந்து பணியாற்றிய துணை பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் கொல்கத்தா அணியில் கம்பீருடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இலங்கை தொடரிலிருந்து இந்திய அணியுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

பீல்டிங் பயிற்சியாளராக டி.திலீப் தொடருகிறார்.

1 More update

Next Story