முதல் டெஸ்ட்: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வங்காளதேசம்...!


முதல் டெஸ்ட்: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வங்காளதேசம்...!
x
தினத்தந்தி 2 Dec 2023 7:28 AM GMT (Updated: 2 Dec 2023 10:36 AM GMT)

டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வங்காளதேசம் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.

டாக்கா,

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஷெல்ஹட் நகரில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 310 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து 317 ரன்கள் எடுத்தது. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 338 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால், வங்காளதேச அணியின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து 181 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், நியூசிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை முதல் முறையாக வீழ்த்தி வங்காளதேசம் வரலாற்று சாதனை படைத்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story