ஐ.பி.எல். கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி
x

பெங்களூருவை வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது.

சென்னை,

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டூ பிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர். டூ பிளசிஸ் 35 ரன்களிலும், கோலி 21 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அனுஜ் ராவத் உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் முஸ்தாபிசூர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களக கேப்டன் கெய்குவாட், ரச்சின் ரவிந்திரா களமிறங்கினர். கெய்குவாட் 15 ரன்களிலும், ரவீந்திரா 37 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த ரஹானே 27 ரன்களிலும், டேரெல் மிச்சேல் 22 ரன்களிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ச் 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது. ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். பெங்களூரு தரப்பில் அந்த அணியின் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.


Next Story