மனதுக்குள் குழப்பம்...சில போட்டிகளில் ஓய்வு எடுக்க வேண்டும் - ரோகித்துக்கு இந்திய முன்னாள் வீரர் அறிவுரை...!

ரோகித் சர்மா சில ஆட்டங்களில் ஓய்வு எடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அறிவுரை கூறியுள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

மும்பை,

மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. இதுவரை பதிவு செய்த 6 வெற்றிகளுமே பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் கிடைத்து என்றால் மிகையாகாது.

இந்த சீசனில் நடந்த 11 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 10 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில் டெக்னிக்கல் அளவில் எந்த தடுமாற்றமும் இல்லாத நிலைமையில் மனதளவில் பிரச்சனை இருப்பதே ரோகித் சர்மா இப்படி தருமாறுவதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தேவை. இந்த ஐபிஎல் தொடரில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா சரியாக விளையாடவில்லை. அவருடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை.

அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது. எனவே அதற்கு ஒரே தீர்வாக ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்க வேண்டும். அப்படி செய்தால் அவர் அதிக ரன்களை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com