அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக்.. ரோகித் கூறிய வார்த்தை... வைரலாகும் வீடியோ


அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக்.. ரோகித் கூறிய வார்த்தை... வைரலாகும் வீடியோ
x

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் அரை சதம் அடித்து அசத்தினார்.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பவர்பிளே ஓவரிலேயே விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆர்.சி.பி. அணியை ரஜத் படிதார் - பாப் டு பிளஸ்சிஸ் இணை சரிவிலிருந்து மீட்டது. இதில் படிதார் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார்.

இவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவர் 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 16ஆவது ஓவரை மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆகாஷ் மத்வால் வீசினார். அந்த ஓவரில் ஸ்கூப் ஷாட் மூலம் 4 பவுண்டரிகளை ஒரே திசையில் அடித்து தினேஷ் கார்த்திக் அசத்தினார்.

இப்படி ஒரே ஷாட்டுகளை, ஒரே திசையில் ஒரே ஓவரில் அடித்த தினேஷ் கார்த்திக்கை ரோகித் சர்மா கைதட்டி பாராட்டியதோடு, "டி20 உலக கோப்பையில் உங்களை சேர்த்துவிடலாம், நீங்கள் டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும்" என்று கூறினார். அதனை, இஷான் கிஷான் கேட்டுக் கொண்டிருந்தார் இது தொடர்பான வீடியோ வைரலானது.

அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்த ஆட்டத்தில் வெறும் 22 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார்.


Next Story