ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது - அர்ஷ்தீப் சிங்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
image courtesy; twitter/@BCCI
image courtesy; twitter/@BCCI
Published on

பார்ல்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது என்று அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எங்களுக்கு ஐபிஎல் நல்ல அடித்தளமாக அமைந்துள்ளது. என்னை போன்ற இளம் வீரர்களுக்கு ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு இடையே பெரிய தூரம் இல்லை. ஐபிஎல் தொடரில் சர்வதேச வீரர்களின் மன நிலைமையை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கிறது. எங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com