செக் மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது


செக் மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது
x

விதர்பா கிரிக்கெட் கூட்டமைப்பின் கிரிக்கெட் வளர்ச்சி கமிட்டி தலைவராக வைத்யா செயல்பட்டு வருகிறார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வைத்யா. இவர், 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவுக்காக 4 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். விதர்பா கிரிக்கெட் கூட்டமைப்பின் கிரிக்கெட் வளர்ச்சி கமிட்டி தலைவராக வைத்யா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், செக் மோசடி வழக்கில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின்படி, உள்ளூர் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து வைத்யா ஸ்டீல் வாங்கியிருக்கிறார்.

ஆனால், அதற்கு அவர் அளித்த செக், பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால், புதிதாக பணம் அனுப்பும்படி அந்த வர்த்தகர் வலியுறுத்தி இருக்கிறார். இதற்கு வைத்யா மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து வழக்கு கோர்ட்டுக்கு சென்றது.

இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும், பிணை தொகை அடிப்படையில் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.

1 More update

Next Story