ஹாட்ரிக் அரைசதம்...தோனியுடன் சாதனை பட்டியலில் இணைந்த இஷான் கிஷன்...!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

டிரினிடாட்,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிவில் 1-1 என தொடர் சமநிலை வகித்தது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 200 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா, இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோரின் அரை சதத்தின் உதவியுடன் 351 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்னில் சுருண்டது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார்.

அதாவது, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் அரைசதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் ஸ்ரீகாந்த் (1982ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக), திலீப் வெங்சர்க்கார் (1985ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக), முகமது அசாருதீன் (1993ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக), எம்.எஸ்.தோனி (2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), ஸ்ரேயஸ் அய்யர் (2020ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com