மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த விரும்பவில்லை - ஜெய்ஷா

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த விரும்பவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த விரும்பவில்லை - ஜெய்ஷா
Published on

புதுடெல்லி,

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் மாதத்தில் வங்காளதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்காளதேசத்தில் உள்நாட்டு கலவரம் நிலவி வரும் நிலையில், அக்டோபரில் அங்கு திட்டமிட்டபடி மகளிர் டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐசிசி விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டது.

இந்த நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த விரும்பவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். மழைக்காலம் என்பதால் போட்டியை நடத்த வேண்டாம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . இதனால் மகளிர் உலக கோப்பைத் தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. உலக கோப்பைத் தொடர் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கி அக்டோபர் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com