நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு


நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு
x

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐதராபாத்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று தெறிக்கவிட்ட இந்திய அணியினர் அதே உத்வேகத்துடன் நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறார்கள். அக்டோபர், நவம்பரில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பதால், இந்த ஆண்டில் நடைபெறும் ஒவ்வொரு ஒரு நாள் போட்டிகளும் முக்கியத்துவம் பெறுகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்) சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன் அல்லது ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லி அல்லது டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி அல்லது பிளேர் டிக்னெர், லோக்கி பெர்குசன்.


Next Story