உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு


உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 12 Nov 2023 8:09 AM GMT (Updated: 12 Nov 2023 12:11 PM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து மோதுகின்றன.

பெங்களூரு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற உள்ளது. இதில், இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவர் 50வது சதத்தை விளாசி உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

நெதர்லாந்து:-

மேக்ஸ் ஓ டாவ்ட் அல்லது விக்ரம்ஜித் சிங், வெஸ்லி பரேசி, காலின் அகேர்மான், சைபிரான்ட் இங்கில்பிரிட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், தேஜா நிதாமனுரு, லோகன் வான் பீக், வான்டெர் மெர்வ், ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.


Next Story