இந்திய கிரிக்கெட் வீரரரின் சினிமாவை மிஞ்சும் காதல் கதை...!


இந்திய கிரிக்கெட் வீரரரின் சினிமாவை மிஞ்சும் காதல் கதை...!
x

திருமணம் செய்து கொண்டதால் அனைத்து பிரச்சனைகளும் தீரவில்லை ஆனால் திருமணத்திற்கு பிறகும் பல விமர்சனங்களை சந்திக்க வேண்டி வந்தது.

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் ஏப்ரல் மாதம் 1998 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட்டை முதல் முதலாக வீழ்த்தினார்.

அஜித் அகர்கர் இந்தியாவுக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 58 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 288 விக்கெட்டுகளையும், 20 ஓவர் போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்சில் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த ஆட்டமாகும். அதேநேரம், 42 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆட்டமாகும

அஜித் 1999, 2003 மற்றும் 2007 கிரிக்கெட் உலகக் கோப்பைகளிலும், 2007 ஐசிசி உலக இருபது20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார்.ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் இவர்

இந்திய பந்துவீச்சாளர் அஜித் அகர்கரின் காதல் கதை சினிமா கதை போல் உள்ளது. ஒரு மராத்தி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையன் ஒரு முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தான், பின்னர் மதம் காரணமாக திருமணம் செய்து கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டன.

இப்போது அஜித் அகர்கரின் மனைவியாக இருக்கும் பாத்திமா, அவரது நண்பர் மஜாரின் சகோதரி ஆவார். அஜித்தின் விளையாடும் போட்டியை பார்க்கச் செல்லும் போது சில சமயங்களில் மஜார் அக்கா பாத்திமாவை ஸ்டேடியத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். போட்டியின் போது இருவரும் சந்தித்தனர். அஜித் 1999 ஆம் ஆண்டு பாத்திமா காடியல்லியை சந்தித்தார். அஜித்துக்கும் பாத்திமாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறியது.

அஜித் ஒரு மராத்தி பண்டிட் குடும்பத்தை சேர்ந்தவர்அதே நேரத்தில் பாத்திமா ஒரு முஸ்லிம். இவர்கள் காதலுக்கு இடையூறு வந்தது இருந்தாலும் இறுதியாக போராடி பாத்திமாவை அஜித் திருமணம் செய்து கொண்டார்.9 பிப்ரவரி 2002 இல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்து கொண்டதால் அனைத்து பிரச்சனைகளும் தீரவில்லை ஆனால் திருமணத்திற்கு பிறகும் பல விமர்சனங்களை சந்திக்க வேண்டி வந்தது.

திருமணமான சிறிது காலத்திலேயே அஜித்துக்கும் பாத்திமாவுக்கும் ராஜ் என்ற மகன் பிறந்தார்.

அஜீத்துக்கும் பாத்திமா காடியலிக்கும் திருமணமாகி 21 வருடங்கள் ஆகிறது. பாத்திமா 2000 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக ஆலோசகராக பணிபுரிந்தார். அகர்கர் அப்போதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

பாத்திமா தனது சகோதரருடன் அஜித் கலந்து கொள்ளும் போட்டிகள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இதனால் அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது, விரைவில் அவர்கள் காதலில் விழுந்தனர். இவர்களது உறவு 2001 ஆம் ஆண்டளவில் கவனத்தைப் பெற்றது. 2002 ஆம் ஆண்டு அவர்களது பெற்றோரின் ஒப்புதலுடன் இருவரும் மும்பையில் அமைதியான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்; எனவே, விருந்தினர் பட்டியல் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருந்தது. அதே நாளில், பிப்ரவரி 9 அன்று, அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் அழைக்கப்பட்டனர்.


Next Story