ஐ.பி.எல் கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் பெங்களூரு அணி - குஜராத்துடன் இன்று மோதல்


ஐ.பி.எல் கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் பெங்களூரு அணி - குஜராத்துடன் இன்று மோதல்
x

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன்-ரே ட்டில் பின்தங்கி இருக்கும் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் இன்றைய ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வி கண்டால் அந்த அணி எந்தவித சிரமமும் இன்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.

அதுமட்டுமில்லாமல் பெங்களூரு வெற்றி பெறும் பட்சத்தில் ஐதராபாத், பஞ்சாப் அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு கனவு தகர்ந்து விடும். அதே சமயம் பெங்களூரு அணி தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும். எனவே இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடி பெங்களூரு அணிக்கு இருக்கிறது.

அறிமுக அணியாக குஜராத் டைட்டன்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னே றி விட்டது. இந்த ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் எந்தவித பதற்றத்துக்கும் இடமின்றி ஆடும்.

இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ள 67-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூருவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெ ட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதே நேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க பெங்களூரு அணி கடுமையாக போராடும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் யாருடை ய கை ஓங்கும் என்று கணிப்பது எளிதான காரியம் கிடையாது.


Next Story