இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி விலகல்

ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.
Image courtesy:Icc Twitter
Image courtesy:Icc Twitter
Published on

கேப்டவுன், 

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியின்போது தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார். எனினும் காயத்தை பொருட்படுத்தாமல் அவர் பந்து வீசினார். இதனால் காயம் தீவிரமானது. இதன்காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் அவரை அணியில் இருந்து விடுவித்துள்ளார். எனினும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது 

X

Daily Thanthi
www.dailythanthi.com