"பிரபல கிரிக்கெட் வீரர் கன்னத்தில் அறைந்த காதலி" வீடியோ வைரலானதால் சர்ச்சை


பிரபல கிரிக்கெட் வீரர் கன்னத்தில் அறைந்த காதலி வீடியோ வைரலானதால் சர்ச்சை
x

தன்னை ஏமாற்றியதாக கூறி பிரபல கிரிக்கெட் வீரர் கன்னத்தில் அறைந்த காதலில் வீடியோ வைரலானதால் சர்ச்சை வெடித்தது.

சிட்னி

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் குயின்ஸ்லாந்தில் தனது காதலி ஜேட் யார்பரோவுடன் பகிரங்கமாக மோதலில் ஈடுபட்டார்.இதில் யார்பரோ கிளார்க்கை கன்னத்தில் அறைந்தார்.

ஜனவரி 10 ஆம் தேதி நூசாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே இந்த் சம்பவம் நடந்து உள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

41 வயதான ஜேட் யார்ப்ரோ, அவரது சகோதரி ஜாஸ்மின் மற்றும் அவரது கணவரும் ஊடக ஆளுமையுமான கார்ல் ஸ்டெபனோவிக் ஆகியோர் குயின்ஸ்லாந்தில் உள்ள நூசாவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்தனர் அப்போது இந்த் மோதல் நடைபெற்று உள்ளது

வீடியோவில், கிளார்க் தன்னை ஏமாற்றியதாக ஜேட் யார்போரோ குற்றம் சாட்டுவதைக் கேட்கலாம்.

பிப்ரவரியில் கிளார்க்கின் இந்தியாவுக்குத் திட்டமிடப்பட்ட பயணத்தை யார்ப்ரோ குறிப்பிட்டார், கிளார்க் தனது முன்னாள் காதலி தன்னுடன் இந்தியாவுக்கு வரச் சொன்னதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காட்சிகளில் சட்டை அணியாத கிளார்க் ஒரு பூங்காவில் நிற்கிறார். ஒரு குழு சூழ்ந்து கொண்டு நிலைமையை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்கள், அதே நேரத்தில் ஆத்திரமடைந்த யார்ப்ரோ அவரிடம் கத்துகிறார், பின்னர் அவரை முகத்தில் அறைந்தார்.தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் யார்ப்ரோவின் சகோதரியின் கணவரை குத்தினார்.



முன்னாள் காதலியான பிப் எட்வர்ட்ஸுடன் சேர்ந்து கொண்டு தன்னை ஏமாற்றியதாக யார்ப்ரோ குற்றம் சாட்டுவதையும் அந்தக் காட்சிகள் காட்டியது.

இது குறித்து தி டெய்லி டெலிகிராப்பிடம் கிளார்க் கூறியதாவது:- இந்த மோதலுக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன், மேலும் எனது செயல்களால் நான் நொறுங்கிவிட்டேன் என கூறி உள்ளார்.

நூசா பூங்காவில் தகராறு செய்ததற்காக மைக்கேல் கிளார்க் மற்றும் அவரது காதலி ஜேட் யார்ப்ரோ ஆகியோருக்கு குயின்ஸ்லாந்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9 முதல் தொடங்க உள்ளது.

இதனால் 41 வயதான கிளார்க் வரவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான வர்ணனை ஒப்பந்தத்தை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. பிசிசிஐ உடன் அனைத்து வர்ணனையாளர்களின் ஒப்பந்தத்தையும் வழங்குவதற்கு அல்லது நிறுத்துவதற்கு உரிமையுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தத் தொடரை ஒளிபரப்பும்.

கிரிக்கெட் வீரர் கிளார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 8643, 7981 மற்றும் 488 ரன்கள் எடுத்துள்ளார்.


Next Story