நியூயார்க் ஆடுகளம் மேம்படுத்தப்படும் - ஐ.சி.சி


நியூயார்க் ஆடுகளம் மேம்படுத்தப்படும் - ஐ.சி.சி
x

Image Courtesy: @BCCI

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது.

நியூயார்க்,

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இந்த செயற்கை ஆடுகளத்தில் பந்து கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆகிறது.

இது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்றும் தரமற்று இருப்பதாகவும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கருத்து தெரிவிக்கையில்,

நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது. உலகத்தரம் வாய்ந்த மைதானக் குழு, நிலைமையை சரி செய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story