தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்...இம்பேக்ட் பீல்டர் விருதை வென்ற சாய் சுதர்சன்..!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

பார்ல்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

இதில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீரருக்கு 'இம்பேக்ட் பீல்டர்' என்ற விருதை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த 'இம்பேக்ட் பீல்டர்' விருதை இளம் வீரரான சாய் சுதர்சன் வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com