டி20 உலகக்கோப்பை: பார்ம் பிரச்சினை இல்லை - விராட் கோலிக்கு ஆதரவு குரல் கொடுத்த ரோகித் சர்மா


டி20 உலகக்கோப்பை: பார்ம் பிரச்சினை இல்லை - விராட் கோலிக்கு ஆதரவு குரல் கொடுத்த ரோகித் சர்மா
x

image courtesy: PTI

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்து வருகிறார்.

கயானா,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் நாளை மோத உள்ளது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே விராட் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேசுகையில், " விராட் கோலி ஒரு தரமான வீரர். அணியில் அவரின் முக்கியத்துவம் எங்களுக்கு நன்றாக தெரியும். 15 ஆண்டுகளாக விளையாடும் வீரர் பார்மில் இருப்பதும், இல்லாமல் போவதும் பிரச்சினையே கிடையாது. அவர் ஒரு நோக்கத்துடன் உள்ளார். அவர் தனது ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக கூட சேமித்து வைத்திருக்கலாம்" என்று ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

1 More update

Next Story