வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி; சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட இலங்கை

Image Courtesy: @ICC
வங்காளதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியது.
துபாய்,
வங்காளதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர். இதையடுத்து இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள இந்த பட்டியலின் படி 6வது இடத்தில் இருந்த இலங்கை வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இலங்கைக்கு எதிராக தோல்வி கண்ட வங்காளதேசம் தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து 7வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியல் விவரம்;
1. இந்தியா - 68.51 சதவீதம்
2. ஆஸ்திரேலியா- 62.50 சதவீதம்
3. நியூசிலாந்து - 50.00 சதவீதம்
4. இலங்கை - 50.00 சதவீதம்
5. பாகிஸ்தான் - 36.66 சதவீதம்
6. வெஸ்ட் இண்டீஸ் - 33.33 சதவீதம்
7. தென் ஆப்பிரிக்கா - 25.00 சதவீதம்
=. வங்காளதேசம் - 25.00 சதவீதம்
9. இங்கிலாந்து - 17.50 சதவீதம்






