பார்டர்-கவாஸ்கர் கோப்பை: 3 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசி விராட் கோலி அசத்தல்...!


பார்டர்-கவாஸ்கர் கோப்பை: 3 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசி விராட் கோலி அசத்தல்...!
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

அகமதாபாத்,

ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா தற்போது விளையாடி வருகிறது. இந்திய அணி தற்போதிய நிலவரப்படி 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இப்போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். 241 பந்துகளில் விராட் கோலி 100 ரன்கள் குவித்துள்ளார்.

கடைசியாக 2019-ம் ஆண்டு விராட் கோலி தனது டெஸ்ட் சதத்தை அடித்தார். அதன் பின்னர் 3 ஆண்டுகள் கழித்து விராட் கோலி இன்று டெஸ்ட் சதம் விளாசியுள்ளார். இது கோலியின் 28-வது டெஸ்ட் சதமாகும்.

இந்த சதத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான போட்டிகளில் மொத்தம் 75 சதத்தை விராட் கோலி குவித்தார்.


Next Story