பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

சார்ஜாவில் நடைபெறும் உள்ள முதல் ஆட்டத்தில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக வங்காளதேசம் பேட்டிங் தேர்வு
Published on

சார்ஜா,

9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்குகிறது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று சார்ஜாவில் நடைபெறும் உள்ள முதல் ஆட்டத்தில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங்கை தேர்வு செய்தார்.  அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com