உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு! தாயகம் திரும்பும் முக்கிய வீரர்

ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார்.
image courtesy; ICC
image courtesy; ICC
Published on

சிட்னி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை.

இதில் பங்கேற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. பின்னர் எழுச்சி பெற்று தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 4ஆம் தேதி இங்கிலாந்துடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் , தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார். மேலும் அவர் மீண்டும் உலகக்கோப்பை தொடருக்கு திரும்புவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ஷ் இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 225 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது 121 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com