உலகக்கோப்பை கிரிக்கெட்; ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா ஆஸ்திரேலியா...? - நெதர்லாந்துடன் நாளை மோதல்...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா ஆஸ்திரேலியா...? - நெதர்லாந்துடன் நாளை மோதல்...!
x
தினத்தந்தி 24 Oct 2023 6:47 AM GMT (Updated: 24 Oct 2023 7:41 AM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைப்பெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

டெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் தொடரில் நாளை நடைப்பெறும் ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா நெதர்லாந்தை சந்திக்க உள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளது.

அதேவேளையில் தங்களது முதல் இரு லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்த நெதர்லாந்து 3வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து 4வது ஆட்டத்தில் தோல்வி கண்ட நெதர்லாந்து தங்களது 2வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.


Next Story