உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாட மாட்டார் - வெளியான புதிய தகவல்...!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாட மாட்டார் - வெளியான புதிய தகவல்...!
Published on

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் புனேவில் மோத உள்ளன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தின்போது வில்லியம்சனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அடுத்த 3 ஆட்டங்களில் (ஆப்கானிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா) வில்லியம்சன் விளையாட மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் வில்லியம்சன் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இன்று நடைபெறும் ஆட்டத்திலும் நியூசிலாந்து அணியை டாம் லேதமே வழிநடத்த உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com