ஐசிசி-யின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது - பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்ற இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட், இங்கிலாந்தின் ஆலி போப் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் இளம் வீரரான ஷமார் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு அயர்லாந்தின் ஏமி ஹண்டர் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான பெத் மூனி, அலிசா ஹீலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com