தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி ?


தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி ?
x
தினத்தந்தி 13 Oct 2021 10:35 AM GMT (Updated: 13 Oct 2021 10:35 AM GMT)

முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

மாலத்தீவு

13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

வங்காளதேச அணியுடன் நடந்த முதல் போட்டியும்  இலங்கை அணியுடன் நடந்த இரண்டாவது போட்டியும்  சமனில் முடிந்த நிலையில் நேபாள அணியுடன் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில்  நடப்பு சாம்பியன் மாலத்தீவு அணியை இன்று எதிர்கொள்கிறது.

ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில்  நீடிக்கிறது.முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது  

Next Story