கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: உருகுவே - கனடா அணிகள் நாளை மோதல்

3வது இடத்திற்கான போட்டியில் அரையிறுதி ஆட்டங்களில் தோல்வி கண்ட உருகுவே - கனடா அணிகள் மோத உள்ளன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

வட கரோலினா,

48-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக்,காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அர்ஜென்டினா, கனடா, உருகுவே, கொலம்பியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் கனடா அணியை வீழ்த்தி அர்ஜென்டினாவும், 2வது அரையிறுதி ஆட்டத்தில் உருகுவே அணியை வீழ்த்தி கொலம்பியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி வரும் 15ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிலையில் 3வது இடத்திற்கான போட்டியில் அரையிறுதி ஆட்டங்களில் தோல்வி கண்ட உருகுவே - கனடா அணிகள் நாளை மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று 3வது இடத்தை பிடிக்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. வட கரோலினாவில் நடைபெற உள்ள இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com